அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகள் பேரூராட்சி ஊழியர்களால் அவ்வப்போது அள்ளப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் குப்பைகளை அள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றத்துடன் கொசு தொல்லையும் அதிகரிக்க தொடங்கியது.
இதனை கருத்திற்கொண்டு அதிரை அய்வா சங்க தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி குப்பைகளை தீயிட்டு அழித்தனர்.
இந்த சமூக சேவை பணிகளில் முன்னின்று செயல்படும் நூர் முஹம்மது, ராஜீக்,உமர் ஹத்தாஃப், ஷேக்,உள்ளிட்ட தன்னார்வலர்கள் இணைந்து இப்பணியை முன்னெடுத்தனர். அய்வா சங்கத்தினரின் இந்த சமூக பணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.