பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை கண்டித்து தஞ்சையில் பனகல் கட்டிடம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவலால் மக்கள் அவதியுறும் நிலையில் அனுதினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஏற்றி வருகிறது.இதனை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பூண்டி வாண்டையார் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் AK.கமால் பாட்ஷா,மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் KMM.அப்துல் ஜப்பார்,பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர்,ரெங்கசாமி,ராமகிருஷ்ணன்,காதர்ஷா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்