Home » கொரோனா சூழலில் தன்னார்வளராக மருத்துவ சேவையாற்றிவரும் மாணவ செவிலியன் அதிரை சாஜித் அஹமது..!

கொரோனா சூழலில் தன்னார்வளராக மருத்துவ சேவையாற்றிவரும் மாணவ செவிலியன் அதிரை சாஜித் அஹமது..!

by
0 comment

உலகமெங்கும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த சூழலில் வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவர்களும், செவிலியர்களும், அரசு ஊழியர்கள் என பலரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்,தமிழகத்தில் பல மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும், காவல்துறையினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிலர் மரணம் அடைந்தனர்.

இச்சூழலில், மருத்துவத்துறையில் பணியாற்றும் ஊழியர்கல் பல்வேறு மருத்துவமனைகள் மூடப்பட்டாலும், தங்களால் இயன்ற வரையில் தினமும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் வெளிநோயாளிகளுக்கு அரசின் அறிவுறுதலின் பெயரில் சிகிச்சையே அல்லது ஆலோசனையோ வழங்குகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த ஹவான் சாதிக் பாட்சா அவர்களின் மகனார் சாஜித் அஹமது(20) அவர்கள் சென்னையில் உள்ள தனியார் செவிலியம் பயிலும் கல்லூரியில் இளங்கலை செவிலியர் படிப்பு பயின்று வருகிறார். இவரே அதிராம்பட்டினம் பகுதியில் செவிலியம் படிக்கும் முதல் ஆண் மாணவராவார்.இவர் அதிராம்பட்டினம் பகுதியில் கொரோனா காரணமாக மருத்துவமனை சென்று தினசரி ஊசி போடமுடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு சென்று ஊசி போட்டுவிடுத்தல், அவர்களின் உடல்நிலை குறித்து அந்தந்த மருத்துவர்களை அணுகி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல் போன்ற சேவைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.அதுமட்டுமின்றி, அதிரை ஷிஃபா மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உதவியாக சேவையாற்றி வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவும் சூழலில் தன்னை பற்றி சற்றும் சிந்திக்காமல் தொடர்ந்து மருத்துவ துறையில் செவிலிய மாணவனாக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.மேலும், இது குறித்து அவர் கூறுகையில், நான் மருத்துவராக ஆகவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. ஆனால்,என்னால் மருத்துவராக ஆகமுடியவில்லை. ஆகவே, மருத்துவ துறையில் ஏதாவது ஒரு துறையை பயில வேண்டுமென்பதற்காக செவிலியம் பயின்று மருத்துவம் பார்க்கும் துறையில் தன்னால் இயன்ற உதவிகளை செய்யலாம் என முடிவெடுத்து தற்பொழுது கல்லூரியில் பயின்று வருகிறேன். மேலும் தான் கற்ற கல்வியை மக்களுக்கு பயனுள்ளதாக அமைத்துக்கொள்வேன் என்றும் கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter