கொரோனா தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வுக்கூட்டம் அதிராம்பட்டினம் சாரா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை டிஎஸ்பி எஸ்.புகழேந்தி கணேஷ், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அதிராம்பட்டினம் அனைத்து அரசியல் கட்சியினர் ஜமாத்தார்கள் கிராம பஞ்சாயத்தார்கள், வர்த்தகர்கள், தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர். இதில், கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் கிருமிநாசினி பயன்படுத்துதல் அடிக்கடி கைகழுவுதல் போன்ற கரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.இதில் அனைத்து முஹல்லாவின் செயலாளர் ஆஃப்ரின் நெய்னா முஹமது அவர்களின் பேச்சு அதிகாரிகளின் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டால் நமதூரிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனனைவரும் வலியுறுத்தியதோடு அனைத்து முஹல்லா சார்பில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது இக்கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் மற்றும் தொர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

