பக்ரீத் பெருநாளையொட்டி பட்டுக்கோட்டை சரக அனைத்து ஜமாஅத்தினருடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்..!
தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை சரகத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் தரணிகா தலைமையில் ஆலோசனை கூட்டம் ப்ரியா மகாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் பேசுகையில் கொரோனா ஊரடங்கு சட்டத்திற்குட்பட்டு பின்பற்றிடவும், அரசிற்கு முழு ஒத்துழைப்பை அனைத்து ஜமாஅத்தார்களும் வழங்கிட வேண்டும் என்றும் கூறினார்.
இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அனைத்து ஜமாஅத்தார்கள்,நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.