Thursday, March 28, 2024

முட்டையுடன் இந்த எளிய பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையுமாம்

Share post:

Date:

- Advertisement -

முட்டை என்பது இயற்கையான ஆரோக்கியமான உணவுகளில் மிகவும் முக்கியமானதாகும். ஆரோக்கியமான வாழ்விற்கு பல வழிகளில் உதவியாக இருக்கும் முட்டையானது வேறுசில ஆரோக்கியமான பொருட்களுடன் இணையும்போது இருமடங்கு பலன்களைத் வழங்கக்கூடியது. முட்டைகள் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை.

வேகமான எடை குறைப்பிற்கு காலை உணவாக முட்டையை சாப்பிடுவது உலகம் முழுவதும் தற்போது பரவலாக இருக்கும் உணவுமுறையாகும். முட்டையை எந்த வடிவத்தில் எடுத்துக் கொண்டாலும் அது நம் உடலின் கொழுப்பை கரைக்கும் திறனை அதிகரிக்கும். ஆனால் முட்டையுடன் சில ஆரோக்கிய உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது அது நம் உடலுக்குள் பல அற்புதங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய சிறந்த ஆரோக்கிய உணவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

முட்டை + அவகேடா

அவகேடா போன்ற ஆரோக்கியமான கொழுப்புடன் முட்டைகளை சேர்த்து சாப்பிடுவது நல்லது. கொழுப்பு சாப்பிடுவது உடலுக்கு கேடானது என்பது தவறான கருத்தாகும். ஏனெனில் நல்ல கொழுப்புகள் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும். இதிலிருக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் தொப்பை கொழுப்பைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காம்போ உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் திறன் மற்றும் கடினமாக பயிற்சி செய்வதற்கான ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது.

முட்டை + மிளகாய்

மிளகாய் உங்கள் நாக்கை எரிய செய்யும் அதே நேரத்தில் உடலில் இருக்கும் கொழுப்பையும் எரிக்கும். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் ஒரு ஆய்வில், தினசரி அளவிலான கேப்சைசின் உணவை ஆற்றலாக மாற்றுவதற்கான உடலின் திறனை அதிகரிக்கிறது, இது அதிக கொழுப்பை கரைக்கிறது. அதற்காக இதனை அதிகம் சாப்பிட வேண்டுமென்ற அவசியமில்லை, உங்கள் சமையலில் இதனை சிறிதளவு சேர்த்துக் கொண்டாலே போதும்.

முட்டை + தேங்காய் எண்ணெய்

அடுத்த முறை முட்டையை சமைக்கும் போது மற்ற எண்ணெய்களை தவிர்த்து தேங்காய் எண்ணெயில் சமைக்கவும். மற்ற வகை எண்ணெய்களில் கொழுப்பு அதிகமாக இருக்கும்போது தேங்காய் எண்ணெய் உங்கள் கொழுப்பை எரிக்கும் திறனை 5 சதவீதம் அதிகரிக்கிறது. தினமும் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வது உங்கள் இடுப்பின் அளவை விரைவில் குறைக்கும். இதனை முட்டையுடன் சேர்த்து சாப்பிடும்போது இதன் நன்மைகள் இருமடங்காகும்.
வைட்டமின் டி கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்குமா? புதிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

முட்டை + கருப்பு பீன்ஸ்

உங்கள் காலை உணவை புரத சத்தால் நிரம்ப செய்ய முட்டையுடன் கருப்பு பீன்ஸ் சேர்த்து சாப்பிடுங்கள். அவை புரதம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்தவை. இவை இரண்டுமே ஆரோக்கியமான உடலுக்கு அவசியமானதாகும். நாம் சாப்பிடும் ஒவ்வொரு கிராம் கரையக்கூடிய நார்ச்சத்தும் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க பயன்படுகிறது.

முட்டை + திணை

காலை உணவாக முட்டையுடன் பசையம் இல்லாத பாரம்பரிய தானிய உணவான திணையை எடுத்துக்கொள்ளலாம். இதன் தனித்துவமான சுவை மற்றும் அமைப்பு காலை உணவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. மற்ற தானியங்களை விட அதிக புரதத்துடன், இது நிலையான சிற்றுண்டியை விட முழுதாக உணர வைக்கும்.

முட்டை + ஓட்ஸ்

உங்கள் முட்டைகளுடன் ஓட்ஸ் சாப்பிடுவது உங்கள் இடுப்புக்கு சில தீவிரமான நன்மைகளைச் செய்யலாம். ஓட்ஸ் என்பது எதிர்ப்பு ஸ்டார்ச்சின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும், இது மெதுவாக ஜீரணிக்கும் வகையை சேர்ந்தது. இது பசியை அடக்கும் மற்றும் கலோரி எரிப்பை துரிதப்படுத்தும் செரிமான அமிலங்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. ஒரு ஆய்வில், தினசரி கார்ப்ஸில் வெறும் 5 சதவீதத்தை எதிர்க்கும் மாவுச்சத்துக்காக மாற்றுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை 23 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளது.
எடையை வேகமாக குறைக்க வெறும் 5 நிமிடத்தில் நீங்களே செய்யக்கூடிய இந்த ஜூஸ்களில் ஒன்றை குடிக்கவும்…!

முட்டை + குடைமிளகாய்

முட்டையுடன் குடைமிளகாயை சேர்த்து சாப்பிடுவது எடை இழப்பை விரைவுபடுத்துவதற்கான சிறந்த வழியாகும். ஆரஞ்சில் இருக்கும் வைட்டமின் சி அளவை விட குடைமிளகாயில் இருமடங்கு வைட்டமின் சி உள்ளது. இந்த உயர்ந்த வைட்டமின் சி கொழுப்பை எரிக்கவும், கார்ப்ஸை எரிபொருளாக மாற்றவும் உதவும், இது நாள் முழுவதும் உங்களை உற்சாகப்படுத்தவும், அதே நேரத்தில் உங்கள் இடுப்பை மெலிதாகவும் உதவும்.

முட்டை + கீரை

ஒரு கப் பில்ஏழு கலோரிகளில் மட்டுமே இருக்கும் கீரையை முட்டையுடன் சேர்த்து சாப்பிடுவது தேவையற்ற கலோரிகளை குறைப்பதுடன் அளவற்ற ஊட்டச்சத்துக்களையும் உங்களுக்கு வழங்கும். இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை தசை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் வலிமையை அதிகரிக்கிறது. கீரைகளில் இருக்கும் தைலக்காய்டுகள் நீண்ட நேரம் பசியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
ஆகஸ்ட் மாசம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்தானதாக இருக்கபோகுதாம்… ரொம்ப ஜாக்கிரதையா இருங்க…!

முட்டை + தேநீர்

உங்களுடைய நாளை கவலையாகத் தொடங்கினால் அது உங்கள் எடையை பாதிக்கும். கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து லிப்பிட்களை இழுத்து, உங்கள் கொழுப்பு செல்களில் சேமித்து வைக்கின்றன. உங்கள் முட்டைகளுடன் ஒரு கப் தேநீர் உங்கள் உடல் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை நிர்வகிக்க உதவும், இது உங்கள் எடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும். எடையை குறைக்க தேயிலை கொழுப்பை உருக்கி, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் தேநீர் உதவும்.

இந்த ஊட்டச்சத்து உங்களை கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலில் இருந்து காப்பாற்றுமாம் தெரியுமா?

இந்த பொருட்களோடு சேர்த்து சாப்பிட்டால் எப்படிபட்ட உணவும் ஆரோக்கியமாக மாறிடும் தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா? ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி…!

வைட்டமின் டி கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்குமா? புதிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

ஒரு நாளைக்கு இத்தனை வேகவைத்த முட்டையை சாப்பிட்டால் உங்க உடல் எடை வேகமாக குறையுமாம்…!

எச்சரிக்கை! இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்…!

முட்டையை இந்த பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால் 30 நாட்களில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட எடையை குறைக்கல

முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்… அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..!

குழந்தைகளுக்கு முட்டைகளால் அலர்ஜி ஏற்படாமல் இருக்க அதனை எப்ப கொடுக்கணும் தெரியுமா?

வேஸ்ட்னு நினைக்கிற இந்த உணவுகள் உங்களுக்கு எவ்வளவு யூஸ்புல்லான நன்மைகளை கொடுக்குதுனு தெரியுமா?

கொரோனா நோயாளிகளுக்கு முட்டை ஏன் முக்கிய உணவாக வழங்கப்படுகிறது தெரியுமா?

நம் முன்னோர்கள் ‘அந்த’ விஷயத்திற்கு வயாகராவாக இந்த பொருட்களைத்தான் சாப்பிட்டார்களாம் தெரியுமா?

இந்த ஊட்டச்சத்து உங்களை கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலில் இருந்து காப்பாற்றுமாம் தெரியுமா?

இந்த பொருட்களோடு சேர்த்து சாப்பிட்டால் எப்படிபட்ட உணவும் ஆரோக்கியமாக மாறிடும் தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா? ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி…!

வைட்டமின் டி கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்குமா? புதிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

ஒரு நாளைக்கு இத்தனை வேகவைத்த முட்டையை சாப்பிட்டால் உங்க உடல் எடை வேகமாக குறையுமாம்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...