மரண அறிவிப்பு : ஹாஜா நகரைச் சேர்ந்த மர்ஹும் லெ.மு. அபுல் ஹசன் அவர்களின் மகனும், மர்ஹும் I.M. முகமது முகைதீன், லெ.மு செய்யது அகமது ஆகியோரின் மருமகனும், M.I. இஷாக், I.M. இப்ராஹீம் மஸ்தான், I.M. அகமது இப்ராஹீம் ஆகியோரின் மச்சானும், A. ஹசன் அலி, A. பைசல் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய லெ.மு அப்துல் ரஹ்மான் பாஸ் அவர்கள் இன்று காலை ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.