அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று நியாய விலைக்கடைகள் முன் ஆர்பாட்டம் நடைபெற்றது.
நியாய விலைக் கடைகளில் சர்க்கரையின் விலை இருமடங்கு உயர்வு மற்றும் பருப்பு விநியோகம் நிறுத்திய மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து 22.11.2017 அன்று தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் அதிராம்பட்டினம் திமுக கிளை கழகம் சார்பாக அதிரையில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் அதிரை திமுகவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்துக் கொண்டு மத்திய மாநிலங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
முன்னாள் சேர்மன் அஸ்லம்,நகர திமுக செயலாளர் இராம. குணசேகரன் ,S. இன்பநாதன் (மாவட்ட பிரதிநிதி) திமுக ஒன்றிய சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் அஹமது, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் NKS.சரீப், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் நூர்லாட்ஜ் செய்யது,SSMG பசூல்கான்,JJ சாகுல் ஹமீது,APPLE இப்றாகிம்,பழஞ்சூர் K.செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், திமுக உறுப்பினர்கள் மற்றும் மகளிரணி என ஏராளமானோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.