நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்காக இந்தியா முழுவதும் 154 நகரங்களில் 2,546 மையங்களில் ‘நீட்’ தேர்வை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 3,842 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த தேர்வு மையங்களில் ஒவ்வொரு அறையிலும் 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அனுமதித்து தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிரையையடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளுரில் உள்ள பிரிலியண்ட் (CBSEE) பள்ளியில் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 540 மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என அறிவித்து இருந்த நிலையில் கொரோனா நோய் முடியும் முன்னர் நீட் நுழைவுத் தேர்வு வைத்ததால் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 117 மாணவர்கள் வரவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவது நேற்று துவங்கிய நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிந்தது குறிப்பிடத்தக்கது.



