172
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கப்படும் என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர் சங்க பொதுசெயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளைப் பின்பற்றி 500 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வருகை பொருத்தே கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டம் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.