SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் ஏரிப்புரைக்கரை கிளை சார்பாக 8.11.2020 இன்று மூன்று இடங்களில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் அதிரை பேரூர் தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் தலைமை தாங்கினார்.
எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ரஹீஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்..
இந்த கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் S.J. சாகுல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டார்கள்.
எஸ்டிபிஐ கட்சியின் அதிரை பேரூர் இணைச் செயலாளர் C.அஹமது.MSC அவர்கள் வரவேற்புரை ஆற்றி இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார்கள்.
எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் S.J. சாகுல்ஹமீது, மாவட்டச் செயலாளர் M.முகம்மது ரஹிஸ் மற்றும் அதிரை பேரூர் தலைவர் S.அஹமது அஸ்லம் ஆகியோர் எஸ்டிபிஐ கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
இந்த கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் ஏரிப்புறக்கரை கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்..


