அதிரையில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 1920 ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரையிலும் முஹல்லாவாசிகளுக்கும், பொது மக்களுக்கும் பல எண்ணற்ற சேவைகளை செய்து வந்த அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்போது நூற்றாண்டு விழாவில் கால்பதித்திருக்கிறது.
இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் நாளை 20.11.2020 வெள்ளிக்கிழமை முதல் 22.11.2020 ஞியாயிற்றுக்கிழமை வரை மார்க்க சொற்பொழிவு நிகழ்சி, கேள்வி – பதில் நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இந்த நூற்றாண்டு நிகழ்வுகளை நமது அதிரை எக்ஸ்பிரஸ் -ல் நேரலையாக காணலாம்.. டோன்ட் மிஸ் இட்..