உடனடியாக இடித்துதர கிராமமக்கள் கோரிக்கை!!
அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கயிறு திரிக்கும் பணிக்காக நாபர்டு வங்கி உதவியுடன் உயர்ந்த கட்டிடம் எழுப்பபட்டன.
அன்றைய காலகட்டத்தில் அதில் கயிறு திரிக்கும் பணிகளில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வந்தனர், காலப்போக்கில் இத்தொழில் நலிவடைய தொடங்கியது இதனால் இக்கட்டிடம் உபயோகமின்றி காணப்பட்டது இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.
நாளுக்கு நாள் சிதிலமடையும் இக்கட்டிடம் எப்பொழுது விழுமோ என்ற ஐயப்பாட்டுடன் அப்பகுதிவாழ் பொதுமக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த கஜா புயலுக்கே பலகீனமான இக்கட்டிடம் தற்போது எந்நேரமும் விழும் நிலையில் உள்ளன. இதருணத்தில் நிவர் எனும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் டெல்டா பகுதிகளில் அதீத மழையும் அதனுடன் கூடிய காற்றும் பலமாக வீசும் என்பதால் இப்பகுதி மக்கள் அப்பகுதிகளில் நடமாட அச்சப்படுகிறார்கள்.
அருகில் கோவில் வளாகம் உள்ளதால் சிறுவர்கள் முதல் எல்லோரும் சாமியை வழிப்பட அப்பகுதியை அச்சத்துடனே கடக்கும் நிலை உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இக்கடிடத்தை முழுவதுமாக இடித்து உயிர்பலி ஏற்படாதவாறு மக்களை காக்க வேண்டும் என அக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.