94
இலங்கையை ஒட்டியுள்ள வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
புரெவி புயல் இன்று கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் நெருங்கி வருவதையொட்டி அதிராம்பட்டினத்தில் இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய அதிரை நகரில் விட்டு விட்டு மழை பெய்தது. இம்மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டு உள்ளது மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.