தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை, கடந்த சில நாட்களாக வலுகுறைந்து பனிப்பொழிவும், குளிரும் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை துவங்கியது. காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது.
அதன்படி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று மாலை முதலே தொடர் மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணி வரை பதிவான அளவின்படி அதிராம்பட்டினத்தில் 44.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.