Home » இந்தியாவிலும் தடம் பதித்த உருமாறிய கொரோனா – 20 பேருக்கு தொற்று உறுதி !

இந்தியாவிலும் தடம் பதித்த உருமாறிய கொரோனா – 20 பேருக்கு தொற்று உறுதி !

0 comment

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதுவரை வீரியமிக்க உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியாவில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 பேரும் லண்டனில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இப்போது தான் படிபடியாக இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதிய அதிர்ச்சியாக லண்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் மூலம் உருமாறிய கொரோனா இங்கும் நுழைந்துவிட்டது.

இந்த உருமாறிய கொரோனா வைரஸானது பழைய வைரஸை விட மிகவும் வீரியமானது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகக் கடுமையானது. கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய ஆயிரக்கணக்கானோரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் 20 பேருக்கு வீரியமிக்க உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று வரை 6 பேருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இன்று மேலும் 14 பேருக்கு புதிதாக உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியா முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 20 பேர்களில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இருக்கிறார்.

இதனிடையே ஆரம்பக்கட்டத்திலேயே இந்த விவகாரத்தை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உருமாறிய கொரோனா தொற்றை இந்தியாவில் முற்றிலும் ஒழிக்க தீவிரம் காட்டி வருகிறது. கோவேக்சின் கொரோனா தடுப்பு மருந்துக்கு உருமாறிய கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter