Friday, April 19, 2024

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

Share post:

Date:

- Advertisement -

மறு அறிவிப்பு வரும் வரை, மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க குழு அமைத்தும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்தக் குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளையில், நாடாளுமன்றத்தில் 2 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இடைக்கால நிவாரணம்தானே தவிர முடிவு அல்ல என்று விவசாயிகள் தரப்பு கூறுகிறது.

முன்னதாக, டெல்லியில் தொடரும் போராட்டம் பற்றிய வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் ‘சட்டங்களின் செல்லுபடியாகும் தன்மை பற்றியும், போராட்டங்களால் பாதிக்கப்பட்ட குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

எங்களிடம் உள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப பிரச்னையை தீர்க்க முயற்சிக்கிறோம், சட்டத்தை இடைநிறுத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் சட்டத்தை இடைநிறுத்துவது வெற்று நோக்கத்திற்காக இருக்கக்கூடாது. நாங்கள் ஒரு குழுவை அமைப்போம், அது எங்களுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும், அதன்பின்னரே நடவடிக்கை எடுப்போம். பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது, சுமூக தீர்வு காண விரும்புவோர் குழுவிடம் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கட்டும். குழு அமைப்பதை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் 50 நாள்களாக போராடி வருகின்றனர். அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சு வார்ததையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...