Home » அரசு பணி இனி அதிரையர்களுக்கு எட்டாகனியல்ல! பயன்படுத்திக்கொள்வார்களா இளைஞர்கள்?

அரசு பணி இனி அதிரையர்களுக்கு எட்டாகனியல்ல! பயன்படுத்திக்கொள்வார்களா இளைஞர்கள்?

by அதிரை இடி
0 comment

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), SSC உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்றுவிக்கும் விதமாக அதிரையில் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் எனும் பெயரில் பயிற்சி மையம் துவங்கப்படவுள்ளது.

இது குறித்த கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்களின் கல்வி நிலை, அரசுப் பணிகளில் அதிரையர்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டு பயிற்சி மையத்திற்கான குழு உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்: M.S. அப்துல் ரஜாக் B.Com

துணை தலைவர்: A.M.A காதர் M.A

பொருளாளர்: M. நெய்னா முஹம்மது B.Sc.,

செயலாளர்: வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி B.A.,B.L.,

ஒருங்கிணைப்பாளர்: Er A. அப்துல் ராஜிக் B.E.,

மேலும் குழு உறுப்பினர்களாக 5 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிரையின் அனைத்து பகுதிகளிலும்
அரசுப்பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை துவக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நமதூர் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புகளில் பங்கேற்க அனைவரின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
Er A.அபதுல் ராஜிக் B.E.,
ஒருங்கிணைப்பாளர்,
மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர்,
7200722754

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter