சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவெளி விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட தகவலில், ‘தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை கடல்பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது