Home » தொடர்ந்து உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் விலை – அதிருப்தியில் பொதுமக்கள் !

தொடர்ந்து உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் விலை – அதிருப்தியில் பொதுமக்கள் !

0 comment

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் – டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன. இருப்பினும் இவற்றில் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரத்தான் செய்கிறது.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

பீகார் மாநிலத் தேர்தலை முன்னிட்டு விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி முதல் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக பெட்ரோல் டீசல் உயர்ந்து வருகிறது.

நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 90 ரூபாய் 44 காசுக்கு விற்பனை ஆனது. டீசல் விலையை பொறுத்தவரையில், லிட்டருக்கு 34 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 52 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும், பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் வலியுறுத்தலாக உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter