அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாக மற்றும் சிறு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பாமக, பாஜக, தாமாகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டாக 171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.
அதிமுகவில் மொத்தம் 177 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேர் பெண்கள். தற்போதைய அமைச்சர்கள் பாஸ்கரன், வளர்மதி, நிலோபர் கபீல் தவிர 30 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி மற்றும் ஆர். வைத்திலிங்கம் ஆகியோரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
முழு வேட்பாளர் பட்டியல் :