தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும், கூட்டணி குறித்து இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், அமமுக – தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்த கடிதத்தை பெற்று கொண்டார் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன். அதன்படி அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் :


