Home » ஓபனா சொல்றேன்.. எல்லாமே என் கன்ட்ரோல்தான்.. யார் கால்லயும் விழமாட்டேன்.. ஸ்டாலின் அதிரடி!

ஓபனா சொல்றேன்.. எல்லாமே என் கன்ட்ரோல்தான்.. யார் கால்லயும் விழமாட்டேன்.. ஸ்டாலின் அதிரடி!

0 comment

திமுக ஆட்சிக்கு வந்தால், நம்ம தமிழர்களின் உரிமை எல்லாம் மீட்கப்படும்.. மாநில உரிமைகள் முழுமையா பாதுகாக்கப்படும்.. சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி கண்ட்ரோல்ல இருக்கும்.. தப்பு செய்றவங்க யாரா இருந்தாலும், மறுபடியும் சொல்றேன் யாரா இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்..” என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வீடியோ மூலம் மக்களுக்கு நமபிக்கை உத்தரவாதத்தினை அளித்துள்ளார். இந்த வீடியோதான் அதிமுக – பாஜக தரப்புக்கு கலக்கத்தை தந்து வருகிறது.

திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்று பல கருத்து கணிப்புகள் சொன்னாலும், எந்தவித அலட்சியமும் இல்லாமல், மிதப்பும் இல்லாமல், தங்களின் முழு வெற்றிக்காக, அக்கட்சி களத்தில் போராடி வருகிறது. மற்றொரு பக்கம் தீவிரமான வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.. அதன் ஒருபகுதியாக திமுகதலைவர் வீடியோ ஒன்றின் மூலம் தமிழக மக்களிடம் பேசி உள்ளார்.. முதலில் ஸ்டாலின் வீடியோவில் என்ன பேசினார் என்பதை பார்ப்போம் :

“வணக்கம்.. எல்லாரும் எப்டி இருக்கீங்க.. எலக்‌ஷனுக்கு இன்னும் கொஞ்சம் நாள்தான் இருக்கு.. நான் தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் பண்ணிட்டு இருந்தாலும், இந்த வீடியோ மூலமா சில விஷயங்களை நான் உங்க எல்லார்கிட்டயும் பேசணும்னு தோணுச்சு.. என் மனசுல படறதை ஓபனா நான் இப்போ பேச போறேன்இந்த எலக்‌ஷன் திமுகவுக்கும் ஆளுங்கட்சிக்கும் நடுவே இருக்கிற போட்டி இல்லீங்க.. இது தமிழ் மக்களுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையே நடக்கிற யுத்தம்..

தமிழ்நாட்டில நோட்டாவைவிட கம்மியா ஓட்டு வாங்கிற ஒரு கட்சி, இன்னைக்கு ஆளுங்கட்சியை மிரட்டி மிரட்டியே, தமிழ்நாட்டின் உரிமைகளை மொத்தமா பறிச்சிட்டு இருக்கு.. நம்ம இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசாங்க வேலையை வடமாநிலத்துல இருந்து வர்றவங்களுக்கு தூக்கி தர்றாங்க.. நீட் மாதிரி எக்ஸாம் கொண்டு வந்து நம்ம பிள்ளைங்கள படிக்க விடாம பண்றாங்க.. நம்ம விவசாயிகளோட நிலத்தை புடுங்கி அவங்க வாழ்வாதாரத்தை அழிக்கிறாங்க.

நாம என்ன சாப்பிடணும், நாம என்ன மொழி பேசணும், நாம யாரை கல்யாணம் பண்ணனும், நம்ம குழந்தை என்ன படிக்கணும்னு வரைக்கும் அவங்க முடிவு பண்ணனும்னு நினைக்கிறாங்க. இதையெல்லாம் தட்டி கேட்கிறவங்க அவங்க கால்ல விழுந்து கிடக்கிறாங்க.. இதை இப்படியே விட்டால், நம்ம மொழி, நம்ம வளம், நம்ம சுயமரியாதை, நம்ம சமூக நீதி எல்லாமே சிதைஞ்சி போயிடும்..

நாம அதை தடுக்கணும்னா நாம அவங்களை எதிர்த்து நிக்கணும்.. அவங்க கொட்டத்தை அடக்கணும்.. அதுக்கு ஓட்டுதான் பெரிய ஆயுதம்.. திமுக ஆட்சிக்கு வந்தால், நம்ம தமிழர்களின் உரிமை எல்லாம் மீட்கப்படும்.. மாநில உரிமைகள் முழுமையா பாதுகாக்கப்படும்.. சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி கண்ட்ரோல்ல இருக்கும்.. தப்பு செய்றவங்க யாரா இருந்தாலும், மறுபடியும் சொல்றேன் “யாரா இருந்தாலும்” சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும்..

திமுக இந்து மதத்துக்கு எதிரானதுன்னு ஒரு பொய்யான குற்றச்சாட்டை பரப்புறாங்க.. அதனால நான் தெளிவா சொல்லிடறேன்.. திமுக ஆட்சியில் எல்லா மத மக்களும் பாரபட்சமின்றி சமமா நடத்தப்படுவாங்க.. அவங்களுடைய மத நம்பிக்கை மதிக்கப்படும்.. சமூக நீதி, சமத்துவம் பாதுகாக்கப்படும்.. லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சிதான் என்னுடைய முதன்மையான நோக்கம்.. எல்லா துறையும் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும்.. தமிழ் மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதுவா இருந்தாலும் தடை செய்யப்படும்..- என்னுடைய சுயநலத்துக்காக நான் யார் கால்லயும் விழ மாட்டேன்..

என்னுடைய சுயநலத்துக்காக எந்த சூழலிலும் தமிழர்களின் உரிமைகளை விட்டுத்தர மாட்டேன்.. உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா எப்பவும் களத்தில் இருப்பேன்.. இதெல்லாம் என் மனப்பூர்வமான உறுதிமொழிகள்.. இந்த உறுதிமொழியை என் உசுரா நினைச்சு கடைப்பிடிப்பேன்.. இதை நான் மீறினால் நீங்க என்னை நேரடியா கேள்வி கேட்கலாம்.. தமிழ்நாட்டின் விடியலுக்கு என்னோட துணை நில்லுங்க.. நன்றி” என்று அந்த வீடியோ அத்துடன் முடிகிறது.

இந்த வீடியோதான் படுவைரலாகி வருகிறது. இதற்கு காரணம், ஸ்டாலின் வழக்கம்போலவே ஸ்மார்ட் லுக்குடன் காணப்பட்டாலும், படு கேஷூவலாக பேசுகிறார். இந்த மாதிரி இதற்கு முன்பு அவர் பேசியதில்லை. ஒரு அரசியல் தலைவர் மாதிரியேதான் அவரது பேச்சு, பேசும் தொனியும் தென்படும்.. ஆனால், இந்த வீடியோவில் அப்படி இல்லை. ஆரம்பமே, ஏதோ நம்ம வீட்டுக்கு வந்தவர்களிடம் “வணக்கம்” சொல்லி பேசுவது போல பேசுகிறார். ஏதோ நெருக்கமானவர்களிடம் உரிமையாக பிரசச்னைகளை எடுத்து சொல்லி பேசுவது போல பேசுகிறார்.

இந்த வீடியோவில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது.. இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே, திமுகவின் பிரச்சாரமும் சரி, அவர்களின் தேர்தல் அறிக்கைகளிலும் சரி, மாநில உரிமைகள் என்ற ஒரு விஷயம் முன்னெடுக்கப்படுகிறது. இது மிக முக்கியமான அம்சம் ஆகும். அதிமுக, பாஜக என்ற இரு கட்சிகளாலும் ஒன்றிற்குகூட பதில் சொல்ல முடியாத விவகாரம்தான் இந்த “மாநில உரிமைகள்”. இதைத்தான் இந்த வீடியோவிலும் ஸ்டாலின் மையப்படுத்தி பேசுகிறார்.

அதேபோல, தனக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது என்பதையும், தன்னால நல்ல ஆட்சியை தர முடியும் என்ற உத்தரவாதத்தையும் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்.. அதுமட்டுமல்ல, அதிமுகவை ஸ்டாலின் கண்டுகொள்ளவே இல்லை.. முழுக்க முழுக்க பாசிச சக்திகளுக்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கை தொனியாகவே ஒலிக்கிறது. அத்துடன் மக்களுடன் ஸ்டாலினுக்கு இருக்கும் நெருக்கமும் புலப்படுகிறது!

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter