137
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையை சேர்ந்த மர்ஹும் செய்யது மசூது அவர்களின் மகளும்,மர்ஹும் முஸ்தபா அவர்களின் மனைவியும், அபூபக்கர், முஹம்மது ராஃபி,ரஷித் அலி,பஷிர் அஹமது இவர்களின் தாயாரும் மலையாளி பெரியம்மா என்கிற மரியம் பீவி இன்றுகாலை சாலை விபத்தில் பலியானார்.
தகவலறிந்து வந்த காவல்த் துறையினர் பலியான மூதாட்டியின் உடலை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல் தக்வா பள்ளி மைய வாடியில் மஃரிப் தொழுகைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.