240
போட்டியின் விதிமுறைகள்..
- ஒவ்வொரு நாளும் 4 கேள்விகள் வீதம் கேட்கப்படும்.
- ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- அதிரை எக்ஸ்பிரஸ் ரமலான் சொற்பொழிவின் நேரலைக்குப் பிறகு அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் போட்டிக்கான கேள்வி அப்டேட் செய்யப்பட்டு, அடுத்த நாள் மாலை 8 மணி வரை பதிலளிக்கலாம்.
- இப்போட்டியில் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாமிடம் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
- போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் – ன் சான்றிதழ் வழங்கப்படும்.
- இப்போட்டியை மாற்றியமைக்கவும், தீர்ப்பை இறுதி செய்யவும் அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாக குழுவுக்கு முழு உரிமையுண்டு.
- ரமலான் பிறை 1 முதல் 20 வரை மட்டுமே கேள்விகள் கேட்கப்படும், ரமலான் பிறை 22 அன்று வெற்றியாளர்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு, நோன்புப் பெருநாள் முடிந்த மறுதினம் பரிசுகள் வழங்கப்படும்.
- போட்டியாளர்களின் மதிப்பெண்கள் ஒரேஅளவில் சமமாக இருந்தால் வெற்றியாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்..
- போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.