கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் தொழுகை நடத்த அரசு தடை விதித்து உள்ளது. இருப்பினும் நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி வழங்க தடையில்லை.
இதனால் இன்று முதல் அதிரையின் அனைத்து பள்ளிகளிலும் நோன்புகஞ்சி வினியோகம் 2மணி முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் 2மணியிலிருந்து கஞ்சி வினியோகம் செய்து வருவதாக பள்ளிவாசலில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கஞ்சி வாங்க வரும் நபர்கள் கண்டிப்பாக முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் கொரொனா தொற்றின் அறிகுறிகள் உள்ளவர்கள் கஞ்சி வாங்க வருவதை தவிற்குமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.