Home » திமுக வசம் சென்னை, வடக்கு, டெல்டா, தெற்கு – அதிமுகவை காப்பாற்றிய கொங்கு!

திமுக வசம் சென்னை, வடக்கு, டெல்டா, தெற்கு – அதிமுகவை காப்பாற்றிய கொங்கு!

0 comment

தமிழகத்தில் மண்டலம் வாரியாக எந்த கட்சி எவ்வளவு வாக்குகளை பெற்றது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வாக்களிக்கும் முறையில் மண்டல வாரியாக வித்தியாசங்கள் எப்போதுமே இருந்து வருகிறது.

எப்போதுமே மேற்கு மண்டலம் அதிமுகவுக்கு சாதகமாக இருந்து கொண்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பலம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை மண்டலம், திமுகவுக்கு எப்போதும் கை கொடுத்து வந்துள்ளது.

இந்த சட்டசபை தேர்தலிலும் மண்டல வாரியாக வாக்களிப்பு வித்தியாசமாகத்தான் இருக்கிறது. வழக்கம்போல மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் சென்னை மண்டலம், திமுக கூட்டணியின் கோட்டை என்று மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அப்படி ஒவ்வொரு மண்டலத்திலும் இந்த இரு கட்சிகளும் பெற்ற வாக்கு பதிவு சதவீதம் என்ன என்பதை இதோ இந்த பட்டியலில் பாருங்கள். மண்டலங்கள் வாரியாக மக்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை புலப்படுத்த இது உதவும்.

சென்னை மண்டலம்:

திமுக 49.6%, அதிமுக 35.1%, வடக்கு மண்டலம்: திமுக 44.9%, அதிமுக 43.6%, காவிரி டெல்டா: திமுக 48.4%
அதிமுக 36.9% வாக்குகளை பெற்றுள்ளன. இவை அனைத்திலும் திமுகதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

மேற்கு மண்டலம்:

திமுக 41.7%, அதிமுக 45.2%, தெற்கு மண்டலம்: திமுக 41.18%, அதிமுக 36.4% வாக்குகளை பெற்றுள்ளது. மேற்கு மண்டலம் எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்பது இந்த முறையும் நிரூபணமாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக கூட்டணி வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வடக்கு, டெல்டா, தெற்கு என மேற்கண்ட மூன்று மண்டலங்களிலும் பெருவாரியான தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter