Home » அதிரை வாக்குகளை வாரிசுருட்டிய திமுக! பாதாளத்திற்கு சென்ற அதிமுக!!

அதிரை வாக்குகளை வாரிசுருட்டிய திமுக! பாதாளத்திற்கு சென்ற அதிமுக!!

0 comment

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் ஒரத்தநாடு தவிர்த்து 7 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதில் பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை, அதிமுக கூட்டணியின் என்.ஆர். ரெங்கராஜனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை மொத்தம் 77,698 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர். ரெங்கராஜன் 53,169 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் பாலகிருஷ்ணன் 23,233 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதனடிப்படையில் திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை 24,529 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர். ரெங்கராஜனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினத்தில் பதிவான வாக்குகளின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதிரையில் மொத்தம் 16,968 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில் 11,669 வாக்குகள் திமுகவுக்கு விழுந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிமுகவுக்கு 3,676 வாக்குகளும், நாம் தமிழருக்கு 760 வாக்குகளும், அமமுகவுக்கு 343 வாக்குகளும் விழுந்துள்ளன.

அதன்படி பார்த்தால் அதிரையில் பதிவான வாக்குகளின் பெரும் பகுதி திமுகவுக்கு விழுந்துள்ளது. இதன்மூலம் திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரையின் வெற்றியில், அதிரை வாக்காளர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது, CAA வுக்கு ஆதரவாக ராஜ்யசபாவில் வாக்களித்தது உள்ளிட்ட காரணங்களால் அதிமுகவை அதிரை வாக்காளர்கள் புறக்கணித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter