நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மூன்று இடங்களில் சொந்த சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட்டது.
இதில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை.
வெற்றிக்கான காலமும் நேரமும் கனிந்து வந்த நிலையில் வந்த வாய்ப்பினை தவற விட்டு விட்டன முஸ்லீம் லீக் தலைமை என அக்கட்சியின் அனுதாபிகள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
வேட்பாளர் தேர்வில் தொண்டர்களின் கருத்தை கேட்கவில்லை என்றும்,அயல் நாட்டில் இருந்து வந்த யாரோ ஒரு முகம் தெரியாத நபர்களுக்கு சீட் வழங்குவதை தலைமை கொள்கையாக கொண்டுள்ளது என்கின்றனர்.
கட்சிக்காக காலங்காலமாக உழைக்கும் நபர்களின் எண்ணங்களை தலைமை மதிக்க தவறிவிட்டதாக கூறுகின்றனர்.
மேலும் தேசிய பொறுப்பில் உள்ள பேராசிரியர் தேசிய கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும், மாநில நிர்வாகத்தில் புதிதாக இளைஞர்களை உட்புகுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு இனியாவது முயல வேண்டும்.
தேர்தல் கமிஷனின் அறிவிப்பிற்கும்,
தேர்தலுக்கும் குறுகிய கால இடைவெளியே இருந்த போதிலும், கடின உழைப்பால் பானை சின்னத்தை பொதுமக்களிடம் விசிகவினர் எடுத்து சென்று வெற்றி பெற்றனர். ஆனால் அந்த உழைப்பு,ம் தியாகமும் நம்மிடையே இல்லை.
இன்று சிலர் சின்னத்தை குறை கூறி அலைவதை எம்மால் காணமுடிகிறது.
எந்த சின்னமாக இருக்கட்டும் யானையோ பூனையோ, அதனை வழுவாக மக்களிடம் சேர்த்தால் தான் தேர்தல் நாளன்று நினைவுக்கு வரும் அனால் நம்மவர்கள் ஏணியை வைத்து பிதற்றினார்களே தவிர மக்களிடம் கொண்டு செல்ல தவறிவிட்டனர்
நடந்தது நடந்து விட்டன மாநில தலைமையை வழுப்படுத்த வேண்டும், அதற்கு இளைஞர்களை நிர்வாகத்திற்குள் உட்புகுத்த வேண்டும் இதனால் மடும்மே இனி ஏணி ஏற்றம் தரும்.