Home » ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள்!

ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள்!

0 comment

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏக்களாக தேர்வாகியுள்ளதால் ராஜ்யசபா எம்பி பதவியை கே பி முனுசாமியும் வைத்திலிங்கமும் ராஜினாமா செய்தனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின. இதில் திமுக மற்றும் அதிமுக தலா 3 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். அந்த வகையில் அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கூட்டணி கட்சியான தமாகாவின் ஜி கே வாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முனுசாமியும் வைத்திலிங்கமும் விருப்பமனு தாக்கல் செய்து அவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட கே முனுசாமி வென்றார்.

அது போல் ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வென்றார். இந்த இருவரும் தற்போது ராஜ்யசபா எம்பிக்களாவும் உள்ளதால் இவர்கள் எந்த பதவியில் நீடிப்பர் என்ற கேள்வி எழுந்தது.

நாளை எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்யப்படும் நிலையில் இன்று இருவரும் ராஜ்யசபா எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். ஒரு வேளை அதிமுக வென்றிருந்தால் இந்த இருவரும் மாநில அமைச்சர்களாகியிருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter