113
அதிரை அடுத்த சங்கபரப்பான்காட்டை சேர்ந்த பாலையனின் மகன் பூச்சி (எ) ராஜேந்திரன்(45). இவருக்கு தனலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன்
சுந்தரநாயகிபுரத்தில் மரம் வெட்ட சென்றுள்ளார். மரத்தின் மீது ஏறி கிளையை கலைத்தபோது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த அதிரை காவல் ஆய்வாளர் தாகராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உடலை அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.