அதிராம்பட்டிணத்தில் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க தவறிய வணிக நிறுவனங்களை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது தவிர மீன் மார்கெட் காய்கனி சந்தை,இறைச்சி கூடங்களை தனித்தனியே அமைத்து கொள்ள வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் கடுமையான அபராதம் விதிக்க நேரிடும் என காவல்துறை துணை கண்கானிப்பாளர் புகழேந்தி கனேஷ் எச்சரித்தார்.
மேலும் விரைவில் தற்காலிக மீன் சந்தை அமைத்துக் கொள்ள இடத்தை தேர்வு செய்து அங்கு மீன் சந்தை மாற்றப்படும் எனவும், காய்கனி கடைகளை தக்வா பள்ளி எதிரே உள்ள வராந்தாவில் அமைத்து கொள்ள பேரூராட்சி செயல் அலுவலர் உத்தரவிட்டார்.
மேலும் முககவசம் அணியாமல் சுற்றி திரியும் இளைஞர்களுக்கு அதிகப்பட்ச அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
இந்த ஆய்வின் போது அதிராம்பட்டிணம் ஆய்வாளர் ஜெயமோகன் உள்ளிட்ட காவல் துறையினர் பணியில் இருந்தனர்.

