கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி இந்தியர்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்புசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சியில் இன்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்தி வருகிறார்கள். முன்னதாக இம்முகாமிற்கு வருகை தந்த மருத்துவர் டாக்டர் பாலாஜி உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களை செயல் அலுவலர் பழனிவேல் வரவேற்றார். இந்த நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



