தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வெளிநாடுவாழ் அதிரையர்களிடம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு கும்பல் நிதி வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, தங்கள் அமைப்பின் சார்பில் யாரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வசூல் செய்யவில்லை என்றும், தங்கள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி நிதி வசூல் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது. இந்தநிலையில், அதிரை அனைத்து முஹல்லா பெயரை தவறாக பயன்படுத்தி வசூல் செய்யப்பட்ட நிதி எவ்வளவு? அது என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
