Tuesday, April 23, 2024

நாட்டிலேயே முதல்முறை – பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில், கோவையில் கேஸ்கள் இன்னும் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்தார். கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடக்கின்றன, லாக்டவுன் கட்டுப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று நேரடியாக ஆய்வு செய்தார்.

அதன் ஒரு கட்டமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதில் நோயாளிகளிடம் அருகில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவர்களிடம் கனிவாக நலம் விசாரித்தார். பிபிஇ கிட் அணிந்து இருந்ததால், மருத்துவர்கள் போல அருகில் சென்று நலம் விசாரித்தார். ஸ்டாலின் உடன் சில மருத்துவர்களும் உடன் இருந்தனர். முதல்வரே இப்படி நேரில் வந்து தன்னை விசாரிப்பதை பார்த்து நோயாளிகளும் நெகிழ்ந்து போனார்கள்.

எப்படி இருக்கீங்க.. மூச்சு விட முடியுதா.. சாப்பாடு நல்லா இருக்கா என்றெல்லாம் ஸ்டாலின் நோயாளிகளிடம் கேட்டார். அதோடு மருத்துவர்கள் எப்படி பார்த்துக்கொள்கிறார்கள், ஏதாவது தேவை இருந்தால் சொல்லுங்கள், சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள் என்றும் ஆறுதலாக முதல்வர் ஸ்டாலின் நோயாளிகளிடம் பேசினார்.
நாட்டிலேயே கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை எந்த மாநில முதல்வரும் இதுவரை சந்தித்தது இல்லை. மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிட்டாலும் கூட, நோயாளிகளின் வார்டுக்கு முதல்வர்கள் யாரும் இதுவரை சென்றது இல்லை. ஆனால் இந்தியாவிலேயே முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் இப்படி நேரடியாக நோயாளிகளை சந்தித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மருத்துவமனையில் இப்படி ஆய்வு செய்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நேரடியாக முதல்வரே களமிறங்கி பணிகளை ஆய்வு செய்வதும், நோயாளிகளை சந்திப்பதும் மக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கோவை மக்களுக்கு இது உணர்வு ரீதியாக நெருக்கத்தை கொடுத்துள்ளது.

வீடியோ :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...