Home » Google எச்சரிக்கை! இந்த 5 App-களையும் உடனே Delete செய்யவும்; இல்லனா?

Google எச்சரிக்கை! இந்த 5 App-களையும் உடனே Delete செய்யவும்; இல்லனா?

0 comment

Google Play Store இல் கிடைப்பதாக கூறி… சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஒரு 5 ஆப்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.. மேலும் அவைகளை உடனே டெலிட் செய்யுமாறும் எச்சரித்து உல்ளனர்.. ஏன், எதற்காக, இதோ முழு விவரங்கள்.

ஹைலைட்ஸ்:
5 போலியான ஆப்கள் கண்டுபிடிப்பு
அசல் ஆப்களை போலவே காட்சியளிக்கும் ஆனால் மால்வேர்களை கொண்டிருக்கும்
பேங்க் தகவல்கள், பெர்சனல் டேட்டா, ப்ரைவேட் மெசேஜ்களை திருடும்

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், மில்லியன் கணக்கான டவுன்லோட்களை கண்ட சில பிரபலமான ஆப்களின் போலி வெர்ஷன்கள் இன்னமும் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கத்தான் செய்கிறது.

அலெர்ட்! உங்க Phone-ல இதை ON பண்ணி வச்சி இருக்கீங்களா? உடனே OFF செய்யவும்!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஒரு ஆப்பை டவுன்லோட் செய்யும் முன் அது போலி இல்லை என்பதை நீங்கள் உறுதி செய்யவில்லை என்றால் ஒருவேளை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு “திருட்டுத்தனமான” ஆப்பை இன்ஸ்டால் செய்ய நேரிடலாம்.

அதன் விளைவாக பெர்சனல் தகவல்கள், ப்ரைவேட் மெசேஜஸ் தொடங்கி மொபைல் பேங்கிங் தகவல்கள், மொபைல் போன் ஹைஜாக்கிங், Advertising bombs வரை பல சிக்கல்களை நீங்கள் சந்திருக்க வேண்டியிருக்கும்.

இதுபோன்ற போலியான ஆப்கள் பல வகைப்படும். அதில் மிகவும் மோசமான ஒரு வகைதான் – டீபாட் ட்ரோஜன் (TeaBot Trojan). இது TeaBot அல்லது Anatsa என்றும் அழைக்கப்படுகிறது.

இது எப்படி ஏமாற்றும்?

முன்பே குறிப்பிட்டுள்ளபடி, பிரபலமான பிராண்டுகளிலிருந்து வரும் ஒரு உண்மையான ஆப் போல் இது தன்னை காட்டிக்கொள்ளும்.

இன்னும் சொல்லப்போனால் பல மில்லியன் அல்லது பல ஆயிரம் டவுன்லோட்களை கண்ட ஒரிஜினல் ஆப்பின் அதே லோகோவை கூட இவைகள் பயன்படுத்தும். ஆனால் உற்றுநோக்கினால், லோகோவில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றம் அல்லது பிழை இருக்கும்.

லோகோவில் தவறுகள், பிழைகள் இருந்தாலும்கூட திருடுவதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த போலியான டீபாட் ட்ரோஜன் வகை ஆப்கள் தனக்குள் வைத்திருக்கும் மால்வேரில் எந்த குறையையும் கொண்டிருக்காது.

சமீபத்தில் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், இவ்வகையின் கீழ் 5 போலியான ஆப்களை கண்டறிந்து அது பற்றிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மால்வேர்களை பரப்பும் இந்த 5 ஆப்களின் தொகுப்பை பிட்டெஃபெண்டர் (Bitdefender) சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், மேலும் இவைகளை யாரேனும் தங்கள் ஸ்மாட்போனில் இன்ஸ்டால் செய்திருந்தால், அதை உடனே டெலிட் / அன்இன்ஸ்டால் செய்யுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளியான முதல் பகுப்பாய்வு அறிக்கையின்படி, குறிப்பிட்ட TeaBot வகை மால்வேரால் உங்கள் ஸ்மார்ட்போனில் என்னென்ன செய்ய முடியும்?Android accessibility சேவைகள் வழியாக ஓவர்லே அட்டாக்களை (overlay attacks) நிகழ்த்தும்.
ஸ்மார்ட்போனிற்கு வரும் மெசேஜ்களை இடைமறிப்பு செய்யும்.பல்வேறு கீலாக்கிங் (keylogging) செயல்பாடுகளைச் செய்யும்

முதலில் இன்ஸ்டால், பிறகு பெர்மிஷன்ஸ், பிறகு மறைந்து விடும்!

Bitdefender வழியாக வெளியான அறிக்கையின்படி, “இதுபோன்ற போலி ஆப்கள் ‘அசல்’ பதிப்பின் எந்தவொரு செயல்பாடுகளையும் கொண்டிருக்காது. இதை தெரியாமல் நீங்கள் இன்ஸ்டால் செய்துவிட்டால், இது பிற ஆப்களில் தங்களைக் காட்டவும், நோட்டிபிக்கேஷன் காட்டவும், Google Play-க்கு வெளியே ஆப்களை நிறுவவும் உங்களிடம் Permissions கேட்கும்., தேவையானது கிடைத்ததும் அதன் ஐகான்கள் Hide ஆகிவிடும் ”

அவ்வப்போது, இந்த போலி ஆப்கள் சில விளம்பரங்களைக் காண்பிக்கும் மற்றும் சிஎன்சி அறிவுறுத்தல்களின்படி, டீபோட்டைப் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்ய முயற்சிக்கும்.

இப்படியாக ஆள்மாறாட்டம் செய்யும், மற்றும் நீங்கள் உடனே டெலிட் / அன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய அந்த ஆப்ஸ், இதோ:

Uplift: Health and Wellness App என்பது ஒரிஜினல் ஆப்பின் பெயர் ஆகும். இதன் போலி வெர்ஷனில் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை ஆனால் லோகோவில் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும்.BookReader என்பது போலியான ஆப் ஆகும், இதன் ஒரிஜினல் ஆப் ஆனது BookMate – Read Books & Listen to Audibooks என்கிற பெயரின் கீழ் அணுக கிடைக்கிறது.

PlutoTV என்பது Pluto TV- It’s Free TV என்கிற பெயரின் கீழ் கிடைக்கும் அசல் ஆப்பின் போலியான வெர்ஷன் ஆகும்.அடுத்ததாக Kaspersky: Free Antivirus என்கிற போலியான பெயரில் கிடைக்கும் ஆன்டி வைரஸ் ஆப். இதன் ஒரிஜினல் ஆப் Kaspersky Antivirus: Security, Virus Cleaner என்கிற பெயரின் கீழ் அணுக கிடைக்கிறது.

கடைசியாக VLC MediaPlayer என்கிற போலி ஆப். இது VLC for Android என்கிற ஒரிஜினல் ஆப்பின் பாசாங்கு வெர்ஷன் ஆகும்.

மேற்குறிப்பிட்டுள்ள 5 ஆப்களிநின் ஒரிஜினல் வெர்ஷனை பயன்படுத்தினாலும் சரி, அல்லது தெரியாமல் போலியான பதிப்புகளை இன்ஸ்டால் செய்து இருந்தால் சரி, உடனே க்ராஸ் செக் செய்து கொள்ளவும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter