Friday, March 29, 2024

கொரோனா தடுப்பூசிக்கு 5% GST தொடரும் – ஒன்றிய நிதியமைச்சர் அறிவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது.

இதையடுத்து ஒன்றிய அரசிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினர்.

பின்னர், கடந்த மே 28ம் தேதி 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில நிதியமைச்சர்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் மீதான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய நிதியமைச்சரின் இந்த அறிவிப்பில், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜி.எஸ்.டி இல்லை. கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து மீதான ஜி.எஸ்.டி வரி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா சிகிச்சைக்கான Tocilzumab மருந்துக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மருத்துவ ஆக்சிஜனுக்கான ஜி.எஸ்.டி 12%-ல் இருந்து 5% ஆகவும், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டருக்கான ஜி.எஸ்.டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வென்டிலேட்டர், கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கான வரி 12%-ல் இருந்து 5% ஆகவும், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12%-ல் இருந்து 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தடுப்பூசிகள் மீதான 5% வரி தொடரும் என ஒன்றிய நிதியமைச்சரின அறிவிப்பு மாநில அரசுகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. மேலும் 75% ஒன்றிய அரசே வாங்கும். அதன் ஜி.எஸ்.டி வரியை செலுத்தும். ஜி.எஸ்.டியில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 70% மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...