Home » அதிரை கடற்கரைத்தெருவில் 2ம் கட்ட நிவாரணத் தொகை மற்றும் மளிகைத்தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெருவில் 2ம் கட்ட நிவாரணத் தொகை மற்றும் மளிகைத்தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்!(படங்கள்)

0 comment

கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கொரோனா நிவாரணமாக நான்காயிரத்தில் முதற்கட்டமாக ரூ. 2,000 கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா நிவாரணமாக 2ம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை இம்மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டித்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் கொரோனா நிவாரணமாக 2ம் தவணை ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நியாயவிலைக்கடை எண் 5ல் இத்திட்டத்தை அதிரை திமுக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் அதிரை பேரூர் திமுக நகர செயலாளர் இராம. குணசேகரன், 8வது வார்டு செயலாளர் P. செய்யது முஹம்மது, பேரூர் துணை செயலாளர் A.M.Y. அன்சர்கான், பேரூர் திமுக நிர்வாகிகள் முல்லை மதி, பகுருதீன் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் Y. மொய்தீன், 8வது வார்டு உறுப்பினர்கள் A. சாகுல் ஹமீது, S. அஹமது ஹாஜா, H. செய்யது பஹுதாத், P. செய்யது புஹாரி, M.S. முஹம்மது இஸ்மாயீல், கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் தலைவர் VMA. அஹமது ஹாஜா, செயலாளர் PMS. அமீன், துணைச் செயலாளர் J. மீரா முகைதீன், இணைச் செயலாளர் M.B. அஹமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வந்து பொருட்களையும், நிவாரணத்தொகையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter