SDPI கட்சியின் 13 ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அதிரையில் உள்ள பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் கொடியேற்றி சிறப்பித்தனர்.
SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் N.சபியா பேருந்து நிலையத்திலும், SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் S.J. சாகுல் ஹமீத் நகர அலுவலகத்திலும், SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் N.M. சேக் தாவூத் தக்வா பள்ளியிலு ம், SDPI கட்சியின் வர்த்தகர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபுல் ஹஸன் காலேஜ் முக்கத்திலும் , SDPI கட்சியின் நகர தலைவர் அஹமது அஸ்லம் ஷிஃபா மருத்துவமனை வளாகத்திலும் , SDPI கட்சியின் நகர செயலாளர் சாகுல் ஹமீது ECR பகுதியிலும், கிளை தலைவர் சம்சுதீன் சேர்மன் வாடியிலும், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற உறுப்பினர் C. முத்துலெட்சுமி ஏரிப்புறக்கரை பகுதியிலும் மற்றும் கிளை தலைவர் ஜமால் முஹம்மது உள்ளிட்டோர் ஏறிப்புறக்கரை மற்றொரு பகுதியிலும் கொடியேற்றி சிறப்பித்தனர்.
இக்கொடியேற்றும் நிகழ்வில் C.அஹமது கோஷங்களை முழக்கமிட்ட பின்னர் நிர்வாகிகள் உரையாற்றினர். இதில் 3௦ க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.