தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மல்லிப்பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இந்நிலையில் கோரிக்கையை ஏற்று சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் உத்தரவின் பெயரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசியை பொதுமக்கள் ஆர்வத்துடன் செலுத்தி கொண்டனர்.
முகாமிற்கு வந்தவர்களுக்கு சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார செவிலியர் மாலதி தடுப்பூசி செலுத்தினார்.இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.