Home » கீழக்கரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பட்டைச்சோறு!

கீழக்கரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பட்டைச்சோறு!

0 comment

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பட்டைச்சோறு வழங்கப்பட்டது.

கீழக்கரை கிழக்கு தெரு முஸ்லிம் ஜமாத்தும் சுகாதாரதுறையும் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு கறியுடன் கூடிய பட்டைச்சோறு வழங்கப்பட்டது.

இது குறித்து முஸ்லீம் ஜமாத்தினர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக வயது வித்தியாசமின்றி நிறைய உயிரிழப்புகளை சந்தித்து விட்டோம்.

இதற்கான தீர்வு இறைவன் இடத்தில்தான் உள்ளது

இருப்பினும் அரசின் உத்தரவுக்கு இணங்க அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதில் காட்டும் தயக்கத்தை போக்க ஜமாத்தினரின் முயற்சியில் ஊசி போட்டு கொண்டவர்களுக்கு பனை ஓலை பட்டையில் கமகமக்கும் கறி விருந்து வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter