167
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை வெள்ளிக்கிழமை(02/07/2021) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அறிவதற்காக அதிரை மின்வாரிய அதிகாரியை நாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அதிரையில் நாளை மின்தடை என்பதாக பரவும் தகவல் உண்மையில்லை என்றும், நாளை அதிரையில் முழுநேர மின்வெட்டு கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் அதிரையில் நாளை(02/07/2021) மின்வெட்டு என்று பரவும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.