Home » இனி அதிரை மாணவிகளுக்கு வானமே எல்லை! மார்க்க கல்வியுடன் பட்டப்படிப்பு!அசத்தும் காதிர் முகைதீன் கல்லூரி!!

இனி அதிரை மாணவிகளுக்கு வானமே எல்லை! மார்க்க கல்வியுடன் பட்டப்படிப்பு!அசத்தும் காதிர் முகைதீன் கல்லூரி!!

by அதிரை இடி
0 comment

அதிரை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வி தாகத்தை தீர்க்கும் மகத்தான சேவையை கடந்த 65 ஆண்டுகளாக எம்.கே.என் மதரஸா அறக்கட்டளை செய்து வருகிறது. அடிமைப்படுத்தப்பட்ட சமுதாயத்தை கல்வி எனும் ஒளியால் சிகரம் தொட வைத்த அதே அறக்கட்டளை, தற்போது பெண் பிள்ளைகள் கல்வி உரிமையை பெற தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் பாதுகாப்பான சூழலை உருவாக்கி பி.ஏ. (அரபி), பி.பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி கணிதவியல், பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாட பிரிவுகளில் மகளிர் மட்டும் என்ற தனித்துவத்துடன் பெண் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க திட்டமிட்டு மாணவிகளின் சேர்க்கையை துவக்கியுள்ளது. மாணவிகள் எந்தவித தயக்கமுமின்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்லூரி சென்றுவர வாகன வசதியும் தனி கட்டடம், பிரத்யேக நுழைவாயில் என அனைவரையும் வாயடைக்க வைத்திருக்கிறது ஹாஜி எஸ். முகம்மது மீராஸாகிப் தலைமையிலான எம்.கே.என்.மதரஸா அறக்கட்டளை.

கல்லூரி வளாகத்தில் இருக்கும் பள்ளிவாசலை அனைவரும் பயன்படுத்தும் வகையில் அதனை புரணமைத்து புதியதோர் பாலம் கட்டிய அறக்கட்டளை நிர்வாகம், இப்போது இஸ்லாமிய பெண் பிள்ளைகளின் தேவைக்கான சேவையை துவக்கி இருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

இனியும் தாமதம் வேண்டாம். இன்றே தங்கள் பெண் பிள்ளைக்கான இடத்தை பதிவு செய்திடுங்கள். பாதுகாப்பான சூழலில் மார்க்க கல்வியுடன் உலக கல்வியையும் கற்றிடத்தும்.

இனி ஓர் விதி செய்வோம்… நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்.

-ஜெ.முகம்மது சாலிஹ்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter