Home » அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக உலக மனிதநேய தினம் கொண்டாட்டம்..!

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக உலக மனிதநேய தினம் கொண்டாட்டம்..!

0 comment

2021ஆக 19, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் அரசு கால்நடை மருந்தகம் இணைந்து மாபெரும் “உலக மனிதநேய தினம்”
அதிரை கால்நடை மருந்தகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்
ஐம்பது கால்நடை வளர்ப்போர்களிடம் “தீவனம் மற்றும் தீவனபுல்”
வழங்கப்பட்டது. முன்னதாக ரோட்டரி சங்க தலைவர் Rtn.A.ஜமால் முகமது அவர்கள்
அனைவரையும் வரவேற்று பேசினார்கள், அதிராம்பட்டினம் கால்நடை மருந்தக மருத்துவர் திரு Lion Dr.ச.தெய்வவிருதம்.M.V.sc,
அவர்கள் முன்னிலை வகித்து உலக மனிதநேயம் குறித்த சிறப்புரை ஆற்றினார்கள்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களான அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு பா.பழனிவேல் மற்றும் அதிராம்பட்டினம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு
பயனாளிகளுக்கு தீவனம் மற்றும் தீவனபுல் வழங்கி தொடங்கி வைத்தார்கள்..

இவ்விழாவில் ரோட்டரி சங்க முன்னால் தலைவர் Rtn.S.சாகுல் ஹமீது, Rtn.T.முகமது நவாஸ் கான், தலைவர் தேர்வு Rtn.இசட்.அகமது மன்சூர், உறுப்பினர்கள் Rtn.M.அமெரிக்கா மன்சூர், Rtn.H.முகமது ஜமால், Rtn.H.பாவா பகுருதீன் மற்றும் கால்நடை மருந்தக உதவியாளர், மருந்தாளுநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter