தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவ மாணவிகள் ஆர்வமுடன் சென்று வருகின்றனர்.
அதன்படி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள பள்ளிகள் 9,10,11,12ம் வகுப்புகளின் மாணவ, மாணவிகளுக்காக நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த மாணவிகளுக்கு அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிரை காதிர் முகைதீன் பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு, ரோட்டரி சங்கம் சார்பில் தரமான மாஸ்க் மற்றும் கிருமி நாசினி வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.A. ஜமால் முகம்மது முன்னிலையில் மாஸ்க் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை சுராஜ், பள்ளி ஆசிரியைகள், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் Rtn.A.M. வெங்கடேஷன், Rtn.S. சாகுல் ஹமீது, தலைவர் தேர்வு Rtn.Z. அகமது மன்சூர் ஆகியோர் ஆகியோர் உடனிருந்தனர்.



