Home » அதிரையில் அதிகரிக்கும் ஸ்லிம்பாடி திருடர்கள்!

அதிரையில் அதிகரிக்கும் ஸ்லிம்பாடி திருடர்கள்!

by
0 comment

அதிரையில் நாளொன்றுக்கு நான்கைந்து கடைகளில் திருட்டு சம்பவம் நடப்பதாக காவல் துறைக்கு புகார்கள் வந்த வன்னம் இருக்கிறது.

கடந்த ஒரு மாதங்களில் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளை குறிவைத்து நடத்தப்படும் நவீன கொள்ளையால் நிலை குழைந்து போயுள்ளனர் வியாபாரிகள்.

சிறிய ஒட்டையானலும் கச்சிதமாக களமிறங்கி களவாடும் ஸ்லிம்பாடி திருடனை பிடிக்க முடியாமல் தினறி வருகிறது அதிரை காவல்த்துறை.

பெரிதாக கடையின் பூட்டை உடைதெல்லாம் தற்போதைய திருடர்கள் தமது கை வரிசையை காட்டுவதில்லை.

காற்றுக்காக வைக்கப்படும் ஒருஅடி கேப் ஆனாலும் நேக்காக உள்ளிரங்கி தேவையானதை ஆட்டய போட்டு அலேக்காக எஸ்க்கேப் ஆகி விடுகின்றனர்.

அந்த வகையில் அதிராம்பட்டிணம் சேது சாலையில் இயங்கி வரும் ஒரு சிற்றுண்டியின் எக்ஸ்ஜாஸ்ட் காத்தாடிக்காக வைக்கப்பட்ட சுமார் 3/4 அடி உயரமே கொண்ட ஓட்டையின் வழியாக உள்ளே சென்ற திருடன் அங்கிருந்த 6 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றுள்ளான்.

இதுகுறித்து உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்,புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கண்கானிப்பு காமிராவின் பதிவுகளை ஆய்வு செய்ததில் பலே கிள்ளாடியான அந்த ஸ்லிம் பாடி திருட்டு ஆசாமி, பதிவாகியிருந்த அத்தனை காட்சிகளையும் அழித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் காவல் துறையினர்.

அதிரையில் தொடர் கதையாகி வரும் திருட்டு சம்பவத்திற்கு முற்றுபுள்ளி வைக்க காவல் துறையினருக்கு வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter