அதிரை அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்த முகமது பஷீர், பழைய அட்டைப்பெட்டிகளை சேகரித்து விற்பனை செய்யும் தொழில்புரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று டாடா ஏஸ் வண்டியில் பழைய அட்டைப்பெட்டிகளை சேகரித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை அருகே வந்தபோது இருசக்கர வாகனம் ஒன்று திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் ஏறியபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. உடனே வண்டியை நிறுத்தியபோது அங்கே இருந்த சிலர் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு பஷீரை தாக்க துரத்தினர். இதனால் அச்சமடைந்த அவர், அதிரை காவல் நிலையத்திற்கு செல்வதற்காக வாகனத்தை இயக்கினார். இதனிடையே இருசக்கர வாகனங்களில் விரட்டிக்கொண்டு வந்த மர்மநபர்கள், அதிரை டி.வி.எஸ். சோரூம் அருகே வண்டியை மறித்து கண்மூடித்தனமாக தாக்கினர். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் சிலர், அந்த கும்பலிடமிருந்து பஷீர் மற்றும் நஸ்ருதீன் ஆகியோரை காப்பாற்றி மீட்டனர். இதனையடுத்து நேரடியாக காவல் நிலையம் சென்ற பஷீர், நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கினார். கும்பல் தாக்குதலால் படுகாயடைந்த அவர், அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையிடம் பஷீர், புகார் மனு அளித்துள்ளார். இதனிடையே காவல் நிலையம் வராமல் கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிரையில் வண்டியை மறித்து தாக்கிய கும்பல்! ஒருவர் படுகாயம்!!
84