Thursday, April 25, 2024

அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. தமிழக விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள்!

Share post:

Date:

- Advertisement -

ஓமிக்ரான் உருமாறிய கொரோனா காரணமாக அதிக ஆபத்தான 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் சர்வதேச விமான பயணிகளுக்குத் தமிழ்நாடு சுகாதார துறை பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்கள் தான் முந்தைய அலைகளை ஏற்படுத்தின. இதனால் உருமாறிய கொரோனா வைரஸ்களை உலக நாடுகள் எச்சரிக்கையுடனேயே கையாள்கின்றன. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.

ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய உருமாறிய கொரோனா அதிக மாறுபாடுகளைக் கொண்டிருப்பதால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் இதனை ஆபத்தான கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா காரணமாகப் பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குப் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஓமிக்ரான் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்தச் சூழலில் அதிக ஆபத்தான 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் சர்வதேச விமான பயணிகளுக்குப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய ஆபத்தான நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்த புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும் எனத் தமிழ்நாடு பொதுச்சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பயணத்தைத் தொடங்கும் முன் கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பித்திருக்க வேண்டும். தமிழகம் வந்த பிறகும் விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு 7 நாட்கள் கட்டாய தனிமைக்குப் பிறகு 8ஆம் நாள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதிலும் நெகடிவ் என முடிவு வந்த பிறகு அடுத்த 7 நாட்களுக்கும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து வருவோர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருக்கும்பட்சத்தில் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்காக அவர்களின் மாதிரிகள் அனுப்பப்படும் என்றும் அதுவரை அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு நடவடிக்கைகளைக் கவனிக்கத் தமிழ்நாட்டில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களுக்கும் தலா ஒரு சுகாதார திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர்களை தொடர்பு கொள்ளும் எண்களையும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது . சென்னை – மருத்துவர் பெருமாள் (9444045529), திருச்சி – மருத்துவர் ஸ்ரீராம் (8860250217), கோவை – மருத்துவர் விஜயகுமார் (8762627911), மதுரை – மருத்துவர் அருண் சுந்தரேசன் (9842125593) ஆகியோர் சுகாதார திட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...