அதிராம்பட்டினம் கடை தெருவில் உள்ள உள்ள சீப்சைடு என்றழைக்கப்படும் கிரானி மளிகை வளாகம் தனியார் ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. முன்பொரு காலத்தில் நிர்வாக குளறுபடியால் தனியார்களுக்கு விற்கப்பட்ட வக்பு நிலங்களை மீட்கும் பணியின் தொழிலதிபர் ஹாஜி சிகாபுதீன் தலைமையிலான தக்வா பள்ளியின். நிர்வாகம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தனியாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற தக்வா பள்ளியின் வக்பு நிலங்களை மீட்க பேச்சுவார்த்தை நடத்தியது அதன் பலனாக ஒவ்வொரு தனியாரிடமும் சிக்கியுள்ள நிலங்களை மீட்கும் பணி சுமூகமாக நடந்து வருகிறது.
யாரிடமும் பத்திரமோ,பட்டாவே இதர ஆவணங்கள் ஏதேனும் வைத்திருந்தாலோ அவைகள் செல்லுபடியாகது. நீதிமன்ற உத்தரவு தெளிவான வழிகாட்டுதலை பள்ளியின் நிர்வாகத்திற்கும், வக்பு வாரியத்திற்கும் தெரிவித்து இருக்கிறது.
எனவே பள்ளியின் நிலத்தில் தனியார்களால் கட்டப்பட்ட மேற்கூரை இடிந்தாலோ,அல்லது சிதைந்தாலோ புதுபித்தல் வக்பு சட்டத்தின் படி குற்றமாகும். ஆதலால் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வக்பு நிலங்களை முறையாக பள்ளியின் நிர்வாகத்திடம் ஒப்படைத்து இறைவனின் அருளை பெற்றுகொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட கிராணி வணிக வளாகத்தை நிர்வகித்து வந்த தொழிலதிபர் சிங்கபூரார் சைபுதீன் அவர்கள் முறையாக பள்ளியின் நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்தார். இதனை ஏற்று கொண்ட பள்ளியின் தலைவர் சிகாபுதீன் தனியார்கள் அனுபவித்து வரும் பள்ளியின் வக்பு நிலங்களை ஒப்படைக்க அழைப்பு விடுத்தார்.