ஒமைகிரான் வகை கொரோனா தொற்று 100க்கு மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் இத்தொற்றாளர்கள் அதிகரித்த வன்னம் இருக்கிறார்கள்.
இதனால் ஒன்றிய அரசும் மாநில அரசும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோதி பொதுமக்கள் ஒமைகிரான் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள விழிப்புடன் இருக்க கேட்டு கொண்டார்.
மேலும் தேவையான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தாலம் என அனுமதியளித்தார்.
இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒமைக்கிரான் தொற்றை கட்டுப்படுத்த கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்து இருக்கிறது.